ஏழு கடலும்

1557.இன்ன வேலையின், ஏழு வேலையும்
     ஒத்த போல இரைத்து எழுந்து,
அன்ன மா நகர், ‘மைந்தன் மா முடி சூடும்
     வைகல் இது ஆம்’ எனா,
துன்னு காதல் துரப்ப வந்தவை
     சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும்,
     உற்றபெற்றி உணர்த்துவாம்.
     இன்ன வேலையின் - இப்படிப்பட்டவேளையில்;  ஏழு வேலையும்
ஒத்த போலஇரைத்து எழுந்து -
 ஏழு கடலும் ஒருசேர இரைத்து
எழுந்தாற்போல;  அன்ன மாநகர் -அந்தப் பெரிய நகரத்தில் உள்ளார்;
இது மைந்தன் மாமுடி சூடும் வைகல் ஆம் எனா -இந்நாள் இராமன்
பெருமை பொருந்திய மகுடம் சூடும் நாள் ஆகும் என்று எண்ணி;  துன்னு
காதல்துரப்ப -
 நிறைந்த விருப்பம் தூண்டுதலால்; வந்தவை - செய்து
வந்தவற்றை; சொல்லல் ஆம் வகை - சொல்லுவதற்கு உரிய வகைகள்;
எம் அனோர்க்கு - என்போன்றவர்களுக்கு; உன்னல் ஆவன அல்ல
என்னினும்
 - கருதுவதற்கும் தக்கவை அல்லனஎன்றாலும்; உற்ற பெற்றி
உயர்த்துவாம்
 - முடிந்த அளவு சொல்லுவோம்.
     இராமன் எல்லார்க்கும் நன்மகனாதலால் பொதுவாக ‘மைந்தன்’
என்றார். உன்னல் ஆவன அல்ல- இழிவு சிறப்பும்மை விகாரத்ததால்
தொக்கது. உணர்த்துவாம் - தன்மைப்பன்மைவினைமுற்று.            67

Comments

Popular posts from this blog

கங்கர் - கங்கதேசத்தரசர்களும்

கொங்கர் - கொங்குநாட்டரசர்களும்

வையம் (உலகங்களையும்) ஏழும்