கங்கர் - கங்கதேசத்தரசர்களும்

செய்திதாளில் தக்கோலம் பற்றி
தக்கோலம் - குமுதம் பக்தி - பிப்ரவரி 15 2005

எழுதியவர் பாலகுமாரன்சோழ தேசத்தை மட்டும் ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னர்கள் தங்கள் பெருவலிமையால் சோழ தேசத்தை விரிவுப்படுத்தினார்கள்.

குறிப்பாக சோழ தேசத்திற்கு வடக்கே இருக்கின்ற வயல்கள் நிறைந்த தொண்டை நாட்டை ஆட்சி செய்ய விரும்பினார்கள். பல்லவர்கள் ஆண்டு கொண்டிருந்த இந்த இடத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழதேசத்தை ஆட்சி செய்த ஆதித்த சோழன், பல்லவ மரபை கடைசியாக ஆண்ட அபராஜிதனிடமிருந்து போரிட்டு வென்று, தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான்.
சோழதேசம் இந்த ஆதித்த சோழன் காலத்திலிருந்து வலுவுடைய நாடாக மாறிற்று. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராசாதித்தன் என்ற சோழ மன்னன் திருநாவலூர் என்ற ஊரில் படைவீடு அமைத்து தன்னுடைய வட எல்லையை காப்பாற்றி வந்தான். அப்போது சோழதேசம் நோக்கி படையெடுத்து வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்கிற ராஷ்டிரகூட அரசனும், பூதகன் என்கிற கங்கதேச அரசனும் ஒன்று சேர்ந்து, ராசாதித்தனை எதிர்த்தார்கள். தக்கோலம் என்ற ஊரில் ராசாதித்தன் அவர்களோடு மிகக் கடுமையாக மோதினார். யானை மேல் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த ராசாதித்தனை பூதகன் எய்த அம்பு நெஞ்சை ஊடுருவிக் கொன்றது. அங்கேயே ராசாதித்தன் உயிரை இழந்தான். அவனுக்கு ‘ஆனைமேற் றுஞ்சிய தேவர்’ என்று பெயர் வந்தது. நடுவே இருபத்தைந்து ஆண்டுகள் ராஷ்டிரகூடர்களால் அபகரிக்கப்பட்ட இந்த இடம் மீண்டும் சோழமன்னர்கள் கைக்கு மாறியது. அந்த தக்கோலத்தில் மிக அழகான சிவன் கோவில் ஒன்று உண்டு.
தக்கோலத்தை திருவூறல் என்றும் அழைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீருக்குப் பஞ்சமில்லாமல் எப்போதும் பூமியில் நீர் ஊறிக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு திருவூறல் என்ற பெயர் வந்தது. அருகே ஓடுகின்ற கொற்றவை என்கிற குசத்தலை ஆறு, மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும், கோடைக் காலத்தில் சிறிதளவு மண்வெட்டினாலும் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும் இருப்பதாலும் இந்த ஊருக்கு திருவூறல் என்று பெயர் வந்திருக்கலாம்.
கோவில் மிக அழகாக இருக்கிறது. ஊர் சிறியதாக இருந்தாலும், கோவில் பெரியதாக இருக்கிறது. ஆனால் கோவில் சரியாகப் பராமரிக்கப்படாமல் செடிகளும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. மிகப் பழமையான கோவில் என்பதை கோவிலின் ஒவ்வொரு அம்சமும் வெளிப்படுத்துகின்றன.


கல்கியின் சிவகாமியின் சபதம்
இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
16.முற்றுகைக்கு ஆயத்தம்

"ஒருவருக்கு இரண்டு பேராய்ச் சேர்ந்து கொண்டீர்கள் அல்லவா? அப்படியென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன். மகேந்திர பல்லவர் ரொம்பவும் முன் யோசனையுடன் காரியங்களைச் செய்கிறவர்தான்; சந்தேகமில்லை. ஆனால், அவருடைய தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜா இன்னும் அதிக முன் யோசனை உள்ளவர். ஆகையினால்தான் அவர் துர்விநீதனுடைய தந்தைக்குப் பட்டங்கட்டி வைத்தார். 

அவரே நேரில் கங்கதேசம் சென்று தம் கையினாலேயே மகுடம் சூட்டினார்! அந்தக் காரியத்துக்கு எவ்வளவு நன்றாய் இப்போது துர்விநீதன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள்! சிங்கமும் சிங்கமும் சண்டை போட்டுக் கொண்டிருக்குபோது நடுவில் நரி நுழைவது போல், புலிகேசி படையெடுத்திருக்கும் சமயம் பார்த்துத் துர்விநீதனும் பல்லவ ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்! அவசர அவசரமாக எங்கும் இராத் தங்காமல் துர்விநீதன் தன் சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறான்! இது தெரிந்தும், நான் இந்தக் கோட்டைக் குள்ளே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது! நீங்கள் சக்கரவர்த்தியின் மதிநுட்பத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி பேசுகிறபோது, எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது!" என்று மாமல்லர் கூறுகையில், அவருடைய கண்கள் நெருப்புத் தணலைப் போல் சிவந்து தீப்பொறியைக் கக்கின.



மேலைக் கங்கர்கள்

மேலைக் கங்கர்கள் (கன்னடம்: ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ) பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். இது கிபி 350 - 1000 வரை ஆட்சியில் இருந்தது. இதை மேலைக் கங்கர்களின் அரசமரபு என்றும் கூறுவர். கலிங்கத்தை ஆண்ட (தற்கால ஒடிசா) கீழை கங்கர்களிடம் (கிழக்கு கங்கர்கள்) இருந்து வேறுபடுத்துவதற்காக இவர்கள் மேலைக் கங்கர்கள் எனப்படுகின்றனர். பல்லவ பேரரசின் வலு குன்றிய நேரத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் விடுதலை வேண்டும் என புரட்சி செய்தனர். அக்கால கட்டத்தில் இவர்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சமுத்திர குப்தரின் படையெடுப்புக்கும் இக்கால கட்டத்தின் குழப்பமான நிலையே காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கிபி 350லிருந்து 550 வரை இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தார்கள். முதலில் கோலாரிலும் பின்னர் தலக்காட்டிலும் தங்கள் தலைநகரை அமைத்தார்கள். வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் சீர்குலைந்து, சிதைந்து போகவே கங்க வம்சத்து சிவமாறன் என்ற இளவரசன் கொங்கல் நாடு 8,000 என்ற பகுதியின் சிற்றரசனாக முடிசூட்டிக்கொண்டு கி. பி.755 முதல் கி. பி. 765 வரை ஆட்சிசெய்தான். இவனே கங்க வம்சத்து முதல் அரசன், இவனை கொங்கணி மகாராஜன் என பிருதுகள் சாசனம் விவரிக்கிறது. வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்ததால் மேலைக் கங்கர்கள் ஆயினர்.

பாதமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக காஞ்சி பல்லவர்களுடன் மோதினர். சாளுக்கியர்கள் வழுவிழந்து இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கம் கிபி 753ல் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் தன்னாட்சிக்காக நூறு ஆண்டுகள் போராடி பின் இராஷ்ரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தார்கள். கிபி 10த்தில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கில் இராஷ்ரகூடர்களை மேலைக் சாளுக்கியர்களும் சோழர்களும் இணைந்து முறியடித்தனர். சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.
பரப்பளவில் சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்போதைய தென் கருநாடகத்துக்கு பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் இவ்வரசின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். மேலைக் கங்கர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்தார்கள். சமண சமயத்தை பெரிதும் ஆதரித்தார்கள். சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி போன்றவை இவர்கள் காலத்தில் உருவானதாகும். இவர்கள் கூத்துகலையை பெரிதும் ஆதரித்தார்கள். இது கன்னடசமசுகிருத இலக்கியங்கள் வளர துணைபுரிந்தது. கிபி 978ல் சவுண்டரயாவின் சவுண்டரயாவின் புராணா என்பது இவர்கள் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட பெரும் படைப்பாகும். யானைகள் மேலாண்மை, சமயம் உட்பட பல நூல்கள் இயற்றப்பட்டன.

மேலைக் கங்கர் தோற்றம்


மேலைக் கங்கர்களின் முதல் அரசன் கொங்குனிவர்மன், தாங்கள் இஷ்வாகுவின் பரம்பரையில் (சூரிய வம்சத்தில்), கண்ணுவ கோத்திரத்தில் பிறந்தவன் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளான்.

மேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு

அனந்தவர்மன் சோடகங்கன்கீழைக் கங்கர் பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட மேலைக் கங்கர் மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. களப்பிரர் காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் இந்திரவர்மன் என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின் கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன், கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி[6] என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, ராஜராஜ கங்கேயன் இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான அனந்தவர்மன் சோடகங்கன் 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான வீரராஜேந்திர சோழனை தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அனந்தவர்மனை தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் அனந்தவர்மன் சோழ கங்கன் தன் தலைநகரை 1135 இல் கலிங்கநகருக்கு (இன்றைய கட்டாக்) நகருக்கு மாற்றி, தாங்கள் மேலைக்கங்கர்களாக என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் கீழைக் கங்கர் என்று வழங்குகின்றனர்.

மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: தொடர்பின் குழப்பங்களும் தெளிவும்

மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள் . இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலன் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலம் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்[8].
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு [9], தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காளையை / நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது .
ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து ஒடுக்கி, தலைக்காடு, மைசூர் பகுதிகளை அதன்பின்னர்தான் கையகப்படுத்தினார்கள் என்பதும், 11ஆம் நூற்றாண்டு வரை இப்படி சேர்த்த தேசங்களே கங்கவாடி 96000 என்பதும் தெளிவாகிறது . அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, மேலைக் கங்கர் மரபில் இருந்து கிளைத்த காமர்னவனும் அவன் தம்பிகளும் கலிங்கத்தை வீழ்த்தி, பாலாதித்தனை கீழ்ப்படியசெய்து, முக்கலிங்கத்தை தலைநகராக கொண்டு மூன்று கலிங்க நாடுகளையும் ஒரே சாம்ராஜ்யமாக ஆள துவங்கியதில் இருந்து பிரிந்து செல்கிறது. அதன் பின்னர் காமர்னவனில் இருந்து 18ஆம் தலைமுறையாக அனந்தவர்மன் சோடகங்கன் காலத்தில் மேலைக்கங்கர் என்ற அடையாளம் மறைந்து கீழைக் கங்கர் என்று என்றும் இல்லாத அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒரு பேரரசாக கலிங்கத்து கீழைக் கங்கர் உருபெருகின்றனர்.
கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கோலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்

பழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே இரண்டாம் கலிங்கத்து போர் நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக முக்கலிங்கம் (இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் அருகில்) வம்சாதரா நதி கரையில் இருந்தது.
போருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம்/ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த கட்டாக் நகருக்கு மாற்றியதால்  பிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டியர்  என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம் / ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கொங்கர் - கொங்குநாட்டரசர்களும்

வையம் (உலகங்களையும்) ஏழும்