கொங்கர் - கொங்குநாட்டரசர்களும்



கொங்கு நாடு

கொங்கு நாடு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ளப் பகுதியாகும்.

இடம்[தொகு]

எல்லை பற்றி பழம்பாடல்களும் பிற்கால உரைநடைக்குறிப்புகளும்[தொகு]

கொங்கு எல்லையை வரையறுத்துக் கூறப்பட்ட முதன்மை மூலங்களாக இரண்டு தனிப்பாடல்களும் கொங்குமண்டல சதக பாடலும் சுவடி உரைநடைக்குறிப்பும் உள்ளன. இம்மூலங்களில் உள்ள எல்லைகள் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. மேலும், இந்த முதன்மை மூலங்களின் அருத்தத்தை விளங்கிக்கொள்வதிலும் பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இக்கருத்துகள் எல்லையை வரையறுத்துக் கூறும் இரண்டாம்கட்ட மூலங்களாக உள்ளன.

முதன்மை மூலங்கள்[தொகு]

முதன்மை மூலங்களில் கொடுக்கப்பட்டுள்ள எல்லைகள் பின்வருமாறு
  1. முதலாம் தனிப்பாடல், வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர், மேற்கே வெள்ளிப்பொருப்புக்குன்று, கிழக்கே குழித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது. [1][2][3][தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு 1][தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு 2][தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு 3]
  2. இரண்டாம் தனிப்பாடல், வடக்கே பெரும்பாலை, தெற்கே வைகாவூர், மேற்கே பொருப்புவெளிக்குன்று, கிழக்கே குளித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது. [4][1][2][3][தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு 1][தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு 2][தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு 3][தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு 4][தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு 5]
  3. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல், வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு மண்டலம் என்று கூறுகிறது. [4][2][3][சதகப்பாடல் மூலம் வேறுபாடு 1][சதகப்பாடல் மூலம் வேறுபாடு 2][சதகப்பாடல் மூலம் வேறுபாடு 3]
  4. அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகச் சுவடி டி.3036யில் காணும் உரைநடைக்குறிப்பு படி, வடக்கே மறஞ்சோகரமலை, தெற்கே வாறாக கிரி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதுகரை இந்த சதுரத்திற்குள் உள்ள பகுதி கொங்கு நாடு என்று கூறுகிறது. [5][3][6][சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு 1][சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு 2]
கொங்கு எல்லை குறித்த முதன்மை மூலங்களில் உள்ள எல்லைகள் அட்டவணை
திசை→
மூலம்
வடக்குதெற்குமேற்குகிழக்கு
தனிப்பாடல் 1தலைமலைவைகாவூர்வெள்ளிப்பொருப்புக்குன்றுகுழித்தண்டலை
தனிப்பாடல் 2பெரும்பாலைவைகாவூர்பொருப்புவெளிக்குன்றுகுளித்தண்டலை
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகப் பாடல்பெரும்பாலைபழனிவெள்ளிமலைமதிற்கரை
சுவடி உரைநடைக்குறிப்புமறஞ்சோகரமலைவாறாக கிரிவெள்ளிமலைமதுகரை

முதன்மை மூலங்களுக்கு ஆய்வாளர்களுக்கிடையே நிலவும் விளக்கங்கள்[தொகு]

கொங்கு எல்லை குறித்து பொதுவாக ஆய்வாளர்களிடையே நிலவும் முரண்கள் கீழ்கண்டவைகளாகப் பகுக்கலாம்.
  1. தற்கால தருமபுரி மாவட்டப் பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளும் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று கோவைக்கிழார் ஆரோக்கியசாமி, புலவர் குழந்தை ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[7][8]
  2. காவிரிக்கு வடக்கே உள்ள பகுதிகளான தற்கால சேலம் மாவட்டப் பகுதிகள் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று புலவர் குழந்தை, முனைவர்.சு.சௌந்தரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[7][8][3] வராது என்பவர்கள் கூறும் முக்கியக் காரணம், கொங்கு என்ற பெயர் அப்பகுதிக் கல்வெட்டுகளில் கூறப்பெறவில்லை என்றும் சேலம் மாவட்டம் முழுவதும் சோழர் காலத்தில் மைய அரசின் நேரடி ஆட்சியிலிருந்தது என்பதுமாகும்.[9]
  3. அப்படியே, சேலம் மாவட்டம் கொங்கு எல்லைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டம் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர்.[7]

திரு. முத்துசாமிக் கோனார் விளக்கம்[4][தொகு]

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்திற்கு கி.பி. 1923ஆம் ஆண்டில் உரை எழுதி வெளியிட்ட திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள், எல்லையைக் கூறும் அப்பாடலுக்கு, "கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலமென்பதாம்.", என்று உரை எழுதியுள்ளார்.

கோ. ம. இராமச்சந்திரன் செட்டியாரின்(கோவைக்கிழார்) விளக்கம்[1][தொகு]

தனிப்பாடல் வெண்பாக்கள் படி, "கொங்கு நாட்டின் வடக்கு எல்லை தலைமலை/பெரும்பாலை என்றும், மேற்கு எல்லை வெள்ளி மலை என்றும், கிழக்கு எல்லை குளித்தலை என்றும் தெற்கு எல்லை வைகாவூர் என்னும் பழநி என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன", என்கிறார் கோவைக்கிழார்.

மயிலை சீனி. வேங்கடசாமி விளக்கம்[2][தொகு]

முனைவர்.சு.சௌந்தரபாண்டியன் விளக்கம்[3][தொகு]

கிழக்கு எல்லையாக கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதக பாடலிலும் சுவடி உரைநடைக்குறிப்பிலும் குறிப்பிடப்படும் மதிற்கரை(மதுகரை) என்பது தற்கால மாயனூர் அடுத்த மதுக்கரை எனவும், வடக்கு எல்லையாக முதலாம் தனிப்பாடலில் கூறப்பட்டுள்ள தலைமலை என்றால் தலைமலை எனவும், வடக்கு எல்லையாக பிற பாடல்களில் கூறப்பட்டுள்ள பெரும்பாலை என்பதை தொப்பூர் மலைகளுக்கு அருகே உள்ள தற்கால பெரும்பாலை எனவும் கொள்கிறார்.
மேலும், எல்லைகளைப் பற்றிக் கூறும் போது, "நான்கு மலைகளைக் கொங்கு மண்டலத்தின் நான்கு எல்லைகளாகக் கூறும் ஒரு பழைய வெண்பா; அதன்படி, வடக்கே தலைமலை, தெற்கே வராகமலை, கிழக்கே கொல்லிமலை, மேற்கே வெள்ளிமலை கொங்குமண்டல எல்லைகள். இவ்வாறு கூறுவது, பழங்கால இயற்கை வாழ்வு முறைக்கு ஏற்றவாறு உள்ளது", என்று கூறுகிறார். இதிலுள்ள நான்கு மலைகளை விளக்குகையில்,
  1. தலைமலை என்றால் அதைச் சேர்ந்த பிளிகிரிரங்கன் மலை, மாதேசுரன் மலைதொப்பூர் மலை முதலியவற்றையும் கொள்ளலாம்.
  2. வெள்ளிமலை என்றால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதிற்சேர்ந்த நீலகிரிமலைகளைக் குறிக்கும். வள்ளிமலையே வெள்ளியங்கிரி என்று கூறப்படும்.
  3. கொல்லிமலை என்றால், அதைச் சேர்ந்த பச்சைமலைசேர்வராயன் மலை ஆகியவற்றையும் சேர்த்துக் கருதலாம்.
  4. வாராகமலை என்றால் பழனி மலையே.
என்றுக் கொள்கிறார்.

முனைவர் பட்ட ஆய்வேடுகள்[தொகு]

சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி[7][தொகு]
சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள், சி.மணியன்[10][தொகு]

தற்கால மாவட்ட எல்லைகளை வைத்து எல்லையை வரையறுத்தல்[தொகு]

கொங்கு மண்டலத்தின் எல்லையாக,
  1. மேலுள்ள அனைத்து மூலங்களும் மேற்கு எல்லையாக வெள்ளியங்கிரியைக் குறிப்பிடுகின்றன.
  2. தெற்கு எல்லை, முதலிருபாடல்கள் பழனி மலைக்கு அருகில் உள்ள வைகாவூரையும், மூன்றாம் பாடல் பழனியையும் நான்காவது சுவடி உரைநடைக்குறிப்பு பழனிக்கு அருகில் உள்ள பன்றிமலை ஊராட்சியில் உள்ள பன்றிமலையையும் குறிப்பிடுகின்றன.
  3. கிழக்கு எல்லை, முதலிருபாடல்கள் குளித்தலையையும், மூன்றாம் பாடலும் நான்காவது சுவடி உரைநடைக்குறிப்பும் மாயனூர் அடுத்த மதுக்கரையையும் குறிப்பிடுகின்றன.
  4. வடக்கு எல்லை, முதற்பாடல், தலமலை ஊராட்சியில் உள்ள தலைமலையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடல்கள் பெரும்பாலையையும், நான்காம் சுவடி உரைநடைக்குறிப்பு மறஞ்சோகரமலையையும் குறிப்பிடுகின்றன.
முதற்பாடல் படி, காவிரியின் தென்கரையில் உள்ள தற்கால2018 கோயமுத்தூர் மாவட்டம்திருப்பூர் மாவட்டம்ஈரோடு மாவட்டம்கரூர் மாவட்டத்தின்பெரும்பகுதி, திண்டுக்கல் மாவட்டத்தின் வடபகுதிகளான பழனி வட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வேடசந்தூர் வட்டம் ஆகியவை கொங்கு மண்டலமாகக் கூறப்படுவதாகக் கொள்ளப்படுகிறது.[சான்று தேவை] இரண்டாவது பாடல், மூன்றாம் பாடல், சுவடி உரைநடைக்குறிப்பு ஆகியவற்றின் படி, முதற்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்புடன் காவிரியின் வடகரையில் உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் கங்கவள்ளி வட்டம் தவிர்த்த சேலம் மாவட்டம்நாமக்கல் மாவட்டம்திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஆகிய பகுதிகளையும் சேர்த்து கொங்கு மண்டலமாகக் கூறப்படுவதாகக் கொள்ளப்படுகிறது.[சான்று தேவை]

பெயர்க்காரணம்[தொகு]

கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.[சான்று தேவை]
  1. கங்கு என்றால் ஓரம்,எல்லை,வரம்பு என்று அருத்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேரசோழபாண்டியநாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
  2. கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும், கூறுவார் உண்டு.

உள்ளடக்க நாடுகள்[தொகு]

கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று [11] குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. 24 நாடுகள்
  1. அண்ட நாடு
  2. அரையன் நாடு
  3. ஆறை நாடு
  4. ஆனைமலை நாடு
  5. இராசிபுர நாடு
  6. ஒருவங்க நாடு
  7. காங்கேய நாடு
  8. காஞ்சிக்கோயில் நாடு
  9. காவடிக்கன் நாடு
  10. கிழங்கு நாடு
  11. குறும்பு நாடு
  12. தட்டையன் நாடு
  13. தலையன் நாடு
  14. திருவாவினன்குடி நாடு
  15. தென்கரை நாடு
  16. நல்லுருக்கன் நாடு
  17. பூந்துறை நாடு
  18. பூவாணிய நாடு
  19. பொன்களூர் நாடு
  20. மணல் நாடு
  21. வடகரை நாடு
  22. வாரக்கன் நாடு
  23. வாழவந்தி நாடு
  24. வெங்கால நாடு
இணைநாடுகள்
  1. இடைப்பிச்சான் நாடு
  2. ஏழூர் நாடு
  3. சேல நாடு
  4. தூசூர் நாடு
  5. பருத்திப்பள்ளி நாடு
  6. விமலை நாடு
முதலானவை

வரலாறு

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது.[12]தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.[13]கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[13] தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.[14]

சங்க நூல்களில் கொங்கர்[தொகு]

"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373
"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160
'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

சமய இலக்கியங்களில் கொங்கு[தொகு]

"விரவியவீங்கோய் மலைமுதலாக விமலர்தம் பதிபலவணங்கிக்
குரவலர் சோலையணிதிருப்பாண்டிக் கொடு முடியணைந்தனர் கொங்கில்"- பெரிய புராணம்(-ஏயர்கோன்-85)
"காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலசுழியச்
சீரூரும் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்"-பெரிய புராணம்(-சேரமான்-164)

கயிறு குறு முகவை[தொகு]

கெட்டியான பாறைகளைக் கணிச்சியால் உடைத்து ஆழ்கிணறுகள் தோண்டுவார்கள். 'பத்தல்' என்னும் வாளியைக் கயிற்றில் கட்டி அக் கிணற்றில் நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும்போது பாடிக்கொண்டே இறைப்பார்கள். தண்ணீரை முகந்து பாடுவதால் இப் பாட்டை 'முகவை' என்றனர்.

Comments

Popular posts from this blog

கங்கர் - கங்கதேசத்தரசர்களும்

வையம் (உலகங்களையும்) ஏழும்