Posts

ஏழு கடலும்

1557. இன்ன வேலையின், ஏழு வேலையும்      ஒத்த போல இரைத்து எழுந்து, அன்ன மா நகர், ‘மைந்தன் மா முடி சூடும்      வைகல் இது ஆம்’ எனா, துன்னு காதல் துரப்ப வந்தவை      சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு உன்னல் ஆவன அல்ல என்னினும்,      உற்றபெற்றி உணர்த்துவாம்.       இன்ன வேலையின்   -  இப்படிப்பட்டவேளையில்;   ஏழு வேலையும் ஒத்த போலஇரைத்து எழுந்து -  ஏழு கடலும் ஒருசேர இரைத்து எழுந்தாற்போல;   அன்ன மாநகர் - அந்தப் பெரிய நகரத்தில் உள்ளார்; இது மைந்தன் மாமுடி சூடும் வைகல் ஆம் எனா - இந்நாள் இராமன் பெருமை பொருந்திய மகுடம் சூடும் நாள் ஆகும் என்று எண்ணி;   துன்னு காதல்துரப்ப -  நிறைந்த விருப்பம் தூண்டுதலால்;  வந்தவை -  செய்து வந்தவற்றை;  சொல்லல் ஆம் வகை -  சொல்லுவதற்கு உரிய வகைகள்; எம் அனோர்க்கு -  என்போன்றவர்களுக்கு;  உன்னல் ஆவன அல்ல என்னினும்  - கருதுவதற்கும் தக்கவை அல்லனஎன்றாலும்;  உற்ற பெற்றி உயர்த்துவாம்  - முடிந்த அளவு சொல்லுவோம்.      இராமன் எல்லார்க்கும் நன்மகனாதலால் பொதுவாக ‘மைந்தன்’ என்றார். உன்னல் ஆவன அல்ல- இழிவு சிறப்பும்மை விகாரத்ததால் தொக்கது. உணர்த்துவாம் - தன்மைப்பன்மைவினைமுற்று.      

வையம் (உலகங்களையும்) ஏழும்

1553. வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு      கூட வழங்கும் அம் மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்      விளைந்தது ஒர்காதலால் நைய நைய, நல் ஐம்புலன்கள்      அவிந்து அடங்கி நடுங்குவான் தெய்வ மேனி படைத்த சேயொளி      போல் மழுங்கின - தீபமே.       வையம் ஏழும் ஓர் ஏழும் -  பதினான்கு உலகங்களையும்;   ஆர் உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -  தன் அரிய உயிருடனே சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்;  வீரருள் வீரன் - வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;   மா மகன்மேல் விளைந்தது ஓர் காதலாதல்-  தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற பாசத்தால்;  நையநைய -  மிகவும் வருந்த;   நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி -  சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக;  நடுங்குவான் தெய்வமேனி படைத்த -  நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை பொருந்திய உடலில் இருந்த;   சேய் ஒளிபோல் -  செவ்விய ஒளி மெல்ல மெல்லமழுங்குவது போல;  தீபம் மழுங்கின -  விளக்குகள் (பொழுது விடிவதால்) ஒளி குறைந்தன.      தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய இ

கொங்கர் - கொங்குநாட்டரசர்களும்

Image
கொங்கு நாடு கொங்கு நாடு , தென்னிந்தியாவின்  தமிழ்நாடு  மாநிலத்தின்,  கேரளத்துடன்  எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ளப் பகுதியாகும். இடம் [ தொகு ] எல்லை பற்றி பழம்பாடல்களும் பிற்கால உரைநடைக்குறிப்புகளும் [ தொகு ] கொங்கு எல்லையை வரையறுத்துக் கூறப்பட்ட முதன்மை மூலங்களாக இரண்டு தனிப்பாடல்களும் கொங்குமண்டல சதக பாடலும் சுவடி உரைநடைக்குறிப்பும் உள்ளன. இம்மூலங்களில் உள்ள எல்லைகள் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. மேலும், இந்த முதன்மை மூலங்களின் அருத்தத்தை விளங்கிக்கொள்வதிலும் பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இக்கருத்துகள் எல்லையை வரையறுத்துக் கூறும் இரண்டாம்கட்ட மூலங்களாக உள்ளன. முதன்மை மூலங்கள் [ தொகு ] முதன்மை மூலங்களில் கொடுக்கப்பட்டுள்ள எல்லைகள் பின்வருமாறு முதலாம் தனிப்பாடல், வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர், மேற்கே வெள்ளிப்பொருப்புக்குன்று, கிழக்கே குழித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது.  [1] [2] [3] [தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு 1] [தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு 2] [தனிப்

கங்கர் - கங்கதேசத்தரசர்களும்

Image
https://sites.google.com/site/thakkolam/ செய்திதாளில்தக்கோலம்பற்றி செய்திதாளில் தக்கோலம் பற்றி தக்கோலம் - குமுதம் பக்தி - பிப்ரவரி 15 2005 எழுதியவர் பாலகுமாரன் சோழ தேசத்தை மட்டும் ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னர்கள் தங்கள் பெருவலிமையால் சோழ தேசத்தை விரிவுப்படுத்தினார்கள். குறிப்பாக சோழ தேசத்திற்கு வடக்கே இருக்கின்ற வயல்கள் நிறைந்த தொண்டை நாட்டை ஆட்சி செய்ய விரும்பினார்கள். பல்லவர்கள் ஆண்டு கொண்டிருந்த இந்த இடத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழதேசத்தை ஆட்சி செய்த ஆதித்த சோழன், பல்லவ மரபை கடைசியாக ஆண்ட அபராஜிதனிடமிருந்து போரிட்டு வென்று, தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான். சோழதேசம் இந்த ஆதித்த சோழன் காலத்திலிருந்து வலுவுடைய நாடாக மாறிற்று. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராசாதித்தன் என்ற சோழ மன்னன் திருநாவலூர் என்ற ஊரில் படைவீடு அமைத்து தன்னுடைய வட எல்லையை காப்பாற்றி வந்தான். அப்போது சோழதேசம் நோக்கி படையெடுத்து வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்கிற ராஷ்டிரகூட அரசனும், பூதகன் என்கிற கங்கதேச அரசனும் ஒன்று சேர்ந்து, ராசாதித்தனை எதிர்த்தார்கள். தக்கோலம் என்ற ஊரில் ராசாதித்தன் அவர்களோடு மிகக் க