Posts

Showing posts from October, 2019

ஏழு கடலும்

1557. இன்ன வேலையின், ஏழு வேலையும்      ஒத்த போல இரைத்து எழுந்து, அன்ன மா நகர், ‘மைந்தன் மா முடி சூடும்      வைகல் இது ஆம்’ எனா, துன்னு காதல் துரப்ப வந்தவை      சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு உன்னல் ஆவன அல்ல என்னினும்,      உற்றபெற்றி உணர்த்துவாம்.       இன்ன வேலையின்   -  இப்படிப்பட்டவேளையில்;   ஏழு வேலையும் ஒத்த போலஇரைத்து எழுந்து -  ஏழு கடலும் ஒருசேர இரைத்து எழுந்தாற்போல;   அன்ன மாநகர் - அந்தப் பெரிய நகரத்தில் உள்ளார்; இது மைந்தன் மாமுடி சூடும் வைகல் ஆம் எனா - இந்நாள் இராமன் பெருமை பொருந்திய மகுடம் சூடும் நாள் ஆகும் என்று எண்ணி;   துன்னு காதல்துரப்ப -  நிறைந்த விருப்பம் தூண்டுதலால்;  வந்தவை -  செய்து வந்தவற்றை;  சொல்லல் ஆம் வகை -  சொல்லுவதற்கு உரிய வகைகள்; எம் அனோர்க்கு -  என்போன்றவர்களுக்கு;  உன்னல் ஆவன அல்ல என்னினும்  - கருதுவதற்கும் தக்கவை அல்லனஎன்றாலும்;  உற்ற பெற்றி உயர்த்துவாம்  - முடிந்த அளவு சொல்லுவோம்.      இராமன் எல்லார்க்கும் நன்மகனாதலால் பொதுவாக ‘மைந்தன்’ என்றார். உன்னல் ஆவன அல்ல- இழிவு சிறப்பும்மை விகாரத்ததால் தொக்கது. உணர்த்துவாம் - தன்மைப்பன்மைவினைமுற்று.      

வையம் (உலகங்களையும்) ஏழும்

1553. வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு      கூட வழங்கும் அம் மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்      விளைந்தது ஒர்காதலால் நைய நைய, நல் ஐம்புலன்கள்      அவிந்து அடங்கி நடுங்குவான் தெய்வ மேனி படைத்த சேயொளி      போல் மழுங்கின - தீபமே.       வையம் ஏழும் ஓர் ஏழும் -  பதினான்கு உலகங்களையும்;   ஆர் உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -  தன் அரிய உயிருடனே சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்;  வீரருள் வீரன் - வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;   மா மகன்மேல் விளைந்தது ஓர் காதலாதல்-  தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற பாசத்தால்;  நையநைய -  மிகவும் வருந்த;   நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி -  சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக;  நடுங்குவான் தெய்வமேனி படைத்த -  நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை பொருந்திய உடலில் இருந்த;   சேய் ஒளிபோல் -  செவ்விய ஒளி மெல்ல மெல்லமழுங்குவது போல;  தீபம் மழுங்கின -  விளக்குகள் (பொழுது விடிவதால்) ஒளி குறைந்தன.      தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய இ